கண்டைனர் லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி கோர விபத்து.. 6 பேர் பரிதாப பலி.!
கண்டைனர் லாரி மீது அதிவேகத்தில் வந்த கார் மோதி கோர விபத்து.. 6 பேர் பரிதாப பலி.!
நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றுகொண்டு இருந்த லாரி மீது, அவ்வழியாக வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ - அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் சனேஹி காட் பகுதியில் இன்று காலை கார் ஒன்று பயணம் செய்தது. இந்த காரில் ஓட்டுநர் உட்பட 8 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.
பரபங்கி பகுதியில் கண்டைனர் லாரி ஒன்று பழுதாகி நடுரோட்டில் நின்றுள்ளது. லாரியின் மீது பிற வாகனங்கள் மோதாமல் இருக்க, லாரி ஓட்டுநர் அதன் பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதியில் எச்சரிக்கை பலகையை வைத்துள்ளார்.
இந்நிலையில், அவ்வழியாக அதிவேகத்தில் வந்த கார், நின்று கொண்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த உள்ளூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தோரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.