COD முறையில் ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள ஐபோன் ஆர்டர்.. டெலிவரி ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!
COD முறையில் ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள ஐபோன் ஆர்டர்.. டெலிவரி ஊழியரை போட்டுத்தள்ளிய நண்பர்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!
டெலிவரி பணியில் ஈடுபடும் ஊழியர்களை பதறவைக்கும் சம்பவம் ஒன்று லக்னோவில் நடந்துள்ளது.
டெலிவரிக்கு சென்றவர் சடலமாக மீட்பு
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, மகத் நபர் பகுதியில் வசித்து வருபவர் ராம் மிலன். இவரின் மகன் பாரத் குமார், இவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல பணிக்கு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதையும் படிங்க: கொள்ளைக்கும்பலை தனியாக எதிர்கொண்ட சிங்கப்பெண்; பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள்.. குவியும் பாராட்டுக்கள்.!
2 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள இயலாததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், பாரத் குமாரின் சடலம் சாக்கில் அடைக்கப்பட்டு, இந்திரா நகரில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
சடலம் கால்வாயில் வீச்சு
விசாரணையில், சின்ஹாத் பகுதியில் வசித்து வரும் கஜன் என்பவர், ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள ஐபோனை பணம் கொடுத்து வாங்கும் முறையில் பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துள்ளார். அந்த போனை வாங்க பணம் இல்லாததால், டெலிவரி ஊழியரான பாரத் குமாரை நண்பர் ஆக்சுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தவர், சடலத்தை கால்வாயில் வீசி இருக்கிறார் என்பது அம்பலமானது.
8 ஆண்டுகளாக டெலிவரி ஊழியராக வேலை பார்த்தவர்
காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கால்வாயில் வீசப்பட்ட சடலமும் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பாரத் குமார் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். செப்.23 நன்று காலை 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு சென்றவர், இறுதியில் சடலமாக வீட்டிற்க்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!