ஐயோ எங்களை கொல்லுறானே! நள்ளிரவில் தம்பதியின் அலறல்.. தலைதெறிக்க ஓடிய மகன்.. மரண ஓலத்தால் நடுங்கிய மக்கள்.!
ஐயோ எங்களை கொல்லுறானே! நள்ளிரவில் தம்பதியின் அலறல்.. தலைதெறிக்க ஓடிய மகன்.. மரண ஓலத்தால் நடுங்கிய மக்கள்.!

நிலப்பிரச்சனையில் மகன் பெற்றோரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, மோகன்லால்கஞ்ச், ஜபருளி பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ் வர்மா (வயது 70). இவரின் மனைவி நீ ஷிவ்ப் யாரி (வயது 68). தம்பதிகளுக்கு பிரிஸ்கித் லாலா என்ற மூத்த மகனும், தேவ்தத் என்ற இளமையகனும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நாங்க சந்நியாசம் போறோம் - கும்பமேளாவில் துறவறம் ஏற்ற 7000 பெண்கள்.!
ஜெகதீஷ் வர்மா கொல்லராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, தம்பதிகள் சொத்தை மகன்களுக்கு பிரித்து கொடுப்பதில் தகராறு நிலவி வந்துள்ளது. இதுதொடர்பாக மூத்த மகன் லாலா - பெற்றோர் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்துள்ளது.
தாய்-தந்தை உயிரிழப்பு
இந்நிலையில், சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த லாலா, தனது பெற்றோரை சுத்தியலால் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். கொலையை செய்த மகன் தப்பி ஓடினார்.
நள்ளிரவு நேரத்தில் இவர்கள் வாக்குவாதம் நடந்த பின்னர் கொலை செய்யப்படும்போது, பெற்றோர் அலறிய குரல் பதிவு அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஜாலியா இருக்கும் போதே., காலி பண்ணிட்டேன்" கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்.! போலீசையே அதிர வைத்த சம்பவம்.!