11 வயது சிறுமி அக்கா, அக்காவின் தோழரால் கொடூர கொலை: பெற்றோருக்கு காத்திருந்த துயரம்.!
11 வயது சிறுமி அக்கா, அக்காவின் தோழரால் கொடூர கொலை: பெற்றோருக்கு காத்திருந்த துயரம்.!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபிட் மாவட்டத்தைச் சார்ந்த 11 வயது சிறுமி, தனது 15 வயது அக்கா மற்றும் அவரது 20 வயது காதலனால் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
இவர்கள் இருவரின் காதல் மற்றும் தனிமை வாழ்க்கையை 11 வயது சிறுமி அறிந்து கொண்ட நிலையில், வீட்டில் வைத்து சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை-தாய் துப்புரவு பணியாளராக இருக்கின்றனர். இதனால் சகோதரிகள் இருவரும் பெரும்பாலும் வீட்டில் இருப்பார்கள். பெற்றோர் காலையில் வேலைக்கு சென்றால், மீண்டும் இரவிலேயே வருவார்கள்.
சம்பவத்தன்று இரவு உறங்கிக்கொண்டிருந்த மகளை பெற்றோர் எழுப்பியபோது அவர் மரணித்து தெரியவந்தது. மூத்த மகளிடம் கேட்டபோது, தங்கை மதியத்தில் இருந்து உறங்கினார்.
நான் எழுப்பிப்பார்த்தும் பலனில்லை. அதனால் உறங்கட்டும் என விட்டுவிட்டேன் என்று சமாளித்து இருக்கிறார். இதனை உண்மை என பெற்றோர் நம்பி இறுதிச்சடங்கும் அன்றே செய்துள்ளனர்.
இதற்கிடையில், மூத்த மகளின் செயல்பாடுகளில் இருந்த மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமானது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி 15 வயது சிறுமி மற்றும் அவரின் ஆண் நண்பரை கைது செய்தனர்.