கொடூரத்தின் உச்சம்.. ஆசிரியர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல்.. பரபரப்பு வீடியோ.!
ஆசிரியர்கள் போராட்டத்தில் காவல் துறையினர் கொடூரமாக தடியடி நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசிரியர்கள் போராட்டத்தில் காவல் துறையினர் கொடூரமாக தடியடி நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் 69 ஆயிரம் பள்ளி உதவி ஆசிரியர் பணியிடத்திற்கு மிகப்பெரிய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் இடஒதுக்கீட்டின் படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
கடந்த 2 வருடமாக பணியாணையை வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டம், கோரிக்கை என இருந்து வந்த நிலையில், நேற்று லக்னோ நகரில் மெழுகு ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் நோக்கி ஊர்வலம் புறப்படவே, இவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை அதிகாரிகள், கலைந்துசெல்லக்கூறி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையும் மீறி ஊர்வலம் செல்ல முயற்சித்த காரணத்தால் பிரச்சனை ஏற்பட்டு, காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தடியடியில் பலரும் காயமடைந்த நிலையில், தப்பியோடிய ஆசிரியர்களை துரத்தி சென்ற காவல் துறையினர் தடி மற்றும் காலால் உதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.