மின்தாக்குதலில் சிக்கி உயிருக்காக துடிதுடித்த 4 வயது சிறுமி.. வேடிக்கை பார்த்த இளசுகள்., உயிர்கொடுத்த முதியவர்.! வைரல் வீடியோ உள்ளே.!
மின்தாக்குதலில் சிக்கி உயிருக்காக துடிதுடித்த 4 வயது சிறுமி.. வேடிக்கை பார்த்த இளசுகள்., உயிர்கொடுத்த முதியவர்.! வைரல் வீடியோ உள்ளே.!
உதவி செய்ய மனதும், அனுபவமும் இருந்தால் வயது அனைத்திற்கும் வெறும் எண் மதிப்பே என்பதை உறுதி செய்ய நடந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில், 4 வயது சிறுமி சாலையோரமாக நடந்து வந்துகொண்டு இருந்தார். அப்போது, சிறுமி தேங்கியிருந்த மழை நீரில் நடந்தபடி சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்த மின்சார கம்பத்தின் வழியே, மர்ம நபரொருவர் திருட்டுத்தனமாக மின் இணைப்பை எடுத்ததாக தெரியவருகிறது. ஏற்கனவே மழை பெய்திருந்த காரணத்தால், நீரின் வழியே மின்சாரம் பாய்ந்துள்ளது.
சிறுமி மின்தாக்குதலுக்கு உள்ளாகி நீரில் விழுந்து உயிருக்கு துடிதுடிக்க, அப்பகுதி வழியாக சென்ற பலரும் அதனை வேடிக்கை பார்த்தபடி என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கினர்.
அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் சிறுமியை நேரடியாக தூக்க முயற்சித்து மின் தாக்குதலுக்கு உள்ளாகினர். மற்றொரு முதியவர் சுதாரிப்புடன் தனது துண்டை பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சித்தார்.
அது தோல்வியடைந்த நிலையில், அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் மரத்தடியை கொடுத்தார். அதன் உதவியுடன் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் ஏற்றுக்கொள்ளும் அளவிலான மின்சாரமே நீரில் பாய்ந்துள்ளது.
இதனால் சிறுமி கைகளை அசைத்து மரக்கட்டையை பிடித்துக்கொண்டார். முதியவர் இலாவகமாக சிறுமியை பத்திரமாக மின்தாக்குதலில் இருந்து தூர இழுத்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்து யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் திருட்டு வயர் துண்டிக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.