லுடோவில் பணயம் வைத்து தோல்வியுற்ற பெண் செய்த பகீர் காரியம்.. கண்ணீரில் குளமாகிய கணவனின் கண்கள்.!
லுடோவில் பணயம் வைத்து தோல்வியுற்ற பெண் செய்த பகீர் காரியம்.. கண்ணீரில் குளமாகிய கணவனின் கண்கள்.!
சூதுக்கு அடிமையான முட்டாள் ஆண் பெண்ணை வைத்து தோற்ற காலம் மலையேறி, பெண்ணே தன்னை பணயம் வைத்து தோற்ற சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் கணவர், இராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 6 மாதமாக செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்துள்ளார்.
மாதாமாதம் தனது மனைவிக்கு தவறாது பணம் அனுப்பும் குணம் கொண்ட அவர், 6 மாதங்கள் கழித்து டிசம்பர் 4ம் தேதியான நேற்று தனது வீட்டிற்கு வந்துள்ளார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என எதுவும் சொல்லாமல் வருகை தந்துள்ளார்.
வீட்டிற்கு வந்து மனைவியை தேடிப்பார்த்தபோது, அவர் இல்லை. மாறாக வீட்டின் உரிமையாளரின் இல்லத்தில் இருந்துள்ளார். மனைவியை தன்னுடன் வர கணவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது வந்த வீட்டின் உரிமையாளர், உனது மனைவி லுடோ கேமில் விளையாடி என்னுடன் தோற்றுப்போய்விட்டார். அவர் தன்னையே பணயமாக வைத்து விளையாடி தோற்றதால் என்னுடன் இருக்கிறார். உனது பணத்தை அவர் லுடோவில் இழந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதனால் கண்ணீரில் செய்வதறியாது திகைத்த கணவர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுப்பதை போல பேசவில்லை. மாறாக வீட்டின் உரிமையாளருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதனால் மனைவி தனக்கு வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க புறப்பட்டு இருக்கிறார்.