மாயமான 17 வயது சிறுமியின் உடல் அரைநிர்வாண நிலையில் மீட்பு: நெஞ்சை பதற வைக்கும் துயரம்.!
மாயமான 17 வயது சிறுமியின் உடல் அரைநிர்வாண நிலையில் மீட்பு: நெஞ்சை பதற வைக்கும் துயரம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமாகி இருக்கிறார். இது தொடர்பாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சிறுமியையும் தேடி வந்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில் அங்குள்ள காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் முகத்தில் கல்லால் தாக்கி அடையாளமும் சிதைக்கப்பட்ட நிலையில், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.