காங்கிரசின் பிகினி கேர்ள் என வர்ணிக்கப்பட்ட வேட்பாளர் அர்ச்சனா கெளதம் தோல்வி.. உ.பி ஹஸ்தினாபூர் தொகுதி சங்கடங்கள்.!
காங்கிரசின் பிகினி கேர்ள் என வர்ணிக்கப்பட்ட வேட்பாளர் அர்ச்சனா கெளதம் தோல்வி.. உ.பி ஹஸ்தினாபூர் தொகுதி சங்கடங்கள்.!
நெட்டிசன்களால் காங்கிரஸ் பிகினி கேர்ள் என்று அழைக்கப்பட்ட ஹஸ்தினாபூர் காங்கிரஸ் வேட்பாளர் ஏறக்குறைய தோல்வியை நோக்கிபயணித்து வருகிறார்.
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகன்ட், கோவா உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பஞ்சாபில் ஆம் ஆத்மீ கட்சி ஆட்சி நடைபெறப்போவது உறுதியாகியுள்ள நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடக்கவுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
எப்படியாவது இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என காங்கிரஸ் கட்சி உத்திரபிரதேசத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், ஹஸ்தினாபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அர்ச்சனா கௌதமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அர்ச்சனா கெளதம் பிகினி மாடல் அழகியாக இருந்து வந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்தது அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஹஸ்தினாபூரின் காங்கிரஸ் வேட்பாளர் அர்ச்சனா தோல்வியை தழுவுவது உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 3 ஆவது இடத்தில உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட தினேஷ் காதிக் முதல் நபராக முன்னிலை வகித்து வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் யோகேஷ் வர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இதனால் காங்கிரசின் பிகினி கேர்ள் என்று நெட்டிசன்களால் வர்ணிக்கப்பட்ட அர்ச்சனா கெளதம் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளதால், அவரின் தோல்வியும் ஏறக்குறையாக உறுதியாகிவிட்டது.