திருமண வீட்டில் சோகம்.. பாரம் தாளாது உடைந்த பலகை..! கிணற்று நீரில் மூழ்கி 13 பேர் மரணம்..!
திருமண வீட்டில் சோகம்.. பாரம் தாளாது உடைந்த பலகை..! கிணற்று நீரில் மூழ்கி 13 பேர் மரணம்..!
கிணற்றின் மேலே அமைக்கப்பட்ட பலகையில் மக்கள் அமர, பாரம் தாங்காமல் பலகை உடைந்து கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டம், நௌரங்கியா கிராமத்தில் உள்ள வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள், அங்கிருந்த கிணற்றின் மேலே அமைக்கப்பட்டு இருந்த பலகையின் மீது அமர்ந்து இருந்தனர்.
அப்போது, பலகை அதிகளவு பாரம் தாளாது உடைந்து விழுந்துவிடவே, கிணற்றுக்குள் விழுந்த சிறுமி, பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
கிணற்றில் இருந்து 13 பேரின் சடலத்தை மீட்ட அதிகாரிகள், அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் நேரில் சென்ற குஷிநகர் மாவட்ட ஆட்சியர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சம் கருணை தொகை வழங்குவதாக அறிவித்தார்.
மேலும், இந்த தகவலை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.