"இடிபாடுகளுக்குள் சிக்கி., நொறுங்கியது இதயம்" - ஒடிசா ரயில் விபத்தால் மனம் நொந்த வைரமுத்து.. உருக்கமான டுவீட்..!!
இடிபாடுகளுக்குள் சிக்கி., நொறுங்கியது இதயம் - ஒடிசா ரயில் விபத்தால் மனம் நொந்த வைரமுத்து.. உருக்கமான டுவீட்..!!
இதயமே நொறுங்கிவிட்டது என ரயில் விபத்து குறித்து வைரமுத்து உருக்கமான டுவீட் பதிவிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பால்சோர் மாவட்டத்தில் கோரமண்டல் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டது. அதிவிரைவு ரயில் - சரக்குரயில் மோதிகொண்ட விபத்தில் தற்போது வரை 230 பேர் பலியாகி இருக்கின்றனர்.
400-க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டுவீட் பதிவு செய்துள்ள கவிஞர் வைரமுத்து, "இரும்பு பெட்டியை போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயம் நொறுங்கிவிட்டது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மீட்பு பணியாளர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கம். இருந்த இடத்தில் எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலி செலுத்துகிறேன். கண்ணீர் கண்ணம் தாண்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.