இந்த அரக்கர்கள் கொரோனா வந்தே சாவுவார்கள்! கொந்தளித்த நடிகை வரலக்ஷ்மி! எதனால் தெரியுமா?
Varalakshmi angry an pregnant elephant dead issue
கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் 15 வயது நிறைந்த கர்ப்பிணி காட்டுயானை ஒன்று மிகுந்த பசியால் உணவு தேடி மக்கள் வாழும் பகுதிக்கு சென்றுள்ளது. அப்பொழுது அங்கு சிலர் அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை அந்த கர்ப்பிணி யானை ஆசையுடன் சாப்பிட்டநிலையில், அன்னாசி பழத்தின் உள்ளே இருந்த வெடி யானையின் வாயிலேயே வெடித்துள்ளது. இதனால் அதன் வாய் மற்றும் தும்பிக்கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலிதாங்க முடியாமல் தவித்துவந்த யானை அங்கு மக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அமைதியாக அங்குள்ள ஆற்றில் இறங்கி நின்று பின்னர் உயிரைவிட்டது.
பிரேத பரிசோதனையில் யானையின் வயிற்றில் உள்ள குட்டியும் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் யானை மற்றும் கருவிலிருந்த குட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்தது.
இந்நிலையில் நடிகர் சரத்குமாரின் மகளும் பிரபல நடிகையுமான வரலட்சுமி இதற்கு கண்டனம் தெரிவித்து மிகவும் ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
நான் சொன்னது போல மனிதர்கள் அரக்கர்கள், இந்த ஏழை விலங்குகள் அல்ல. கல்வியறிவுக்கு மனிதாபிமானம் அல்லது பரிவு ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை. இந்த சம்பவம் பொது அறிவு என்பது சிறிதும் இல்லை என்பதை நிரூபிக்கிறது. மிகவும் வெறுப்பாக இருக்கிறது. இந்த அரக்கர்களுக்கு கண்டிப்பாக கொரோனா வந்து அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று நம்புகிறேன் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.