பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷின் கடைசிநேர நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்... கண்ணீருடன் பிராத்தனை செய்யும் மக்கள்.!
பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷின் கடைசிநேர நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்... கண்ணீருடன் பிராத்தனை செய்யும் மக்கள்.!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்துள்ளார். அதில் 200க்கும் மேற்பட்ட பாம்புகள் அரிய வகை ராஜநாகம் மற்றும் நல்ல பாம்பு வகையை சேர்ந்தது.
பாம்புகளை மிகவும் லாவகமாக பிடிக்கும் சுரேஷ் அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து உடனே அங்கு சென்றுள்ளார்.
நல்ல பாம்பை பிடித்து பைக்குள் போட சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு சுரேஷின் முழங்காலில் கடித்துள்ளது. பாம்பு கடித்த பின்பும் விடாமல் அந்த பாம்பை பைக்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின் வாவா சுரேஷை அங்குள்ள மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அரை மயக்கத்தில் இருந்த வாவா சுரேஷ் தனது குடும்பத்தினை நினைத்து கண்கலங்கியுள்ளார். மேலும் தனது மார்பில் தட்டியபடியே எனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக்கொண்டு வருகின்றது.நேரத்தினை வீணடிக்க வேண்டாம் அதிக நேரம் இல்லை இன்னும் வேகமாக செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நான் முழுமையாக மயங்கிவிடுவேன் என்றும் தனது உடலில் எந்தவொரு அசைவும் இருக்காது என்றும் அதனால் இப்பவே மருத்துவமனைக்கு போன் செய்து எல்லாம் தயாராக இருக்க ஏற்பாடுகள் செய்திடுங்க என்று கூறியுள்ளார். வாவா சுரேஷின் இந்த கடைசி நேர வார்த்தைகள் மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வாவா சுரேஷ் நலம் பெற வேண்டி மக்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.