இந்தியாவின் மூன்று மாநிலங்களில் வௌவால்களுக்கும் கொரோனா பாதிப்பு! ஐசிஎம்ஆர் தகவல்.
Vavvalkalukum corona pathipu
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. சீனாவில் உஹான் மக்கள் வௌவால் இறைச்சியை சாப்பிட்டதன் மூலம் தான் கொரோனா பரவியது என பல தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று நிலவரப்படி இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுவரை மனிதர்களை மட்டும் கொரோனா பரிசோதனை செய்து வந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சலப்பிரதேசத்தில் வௌவால்களில் இருந்து மாதிரி சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிசோதனை நடத்தியுள்ளது.
அந்த பரிசோதனையில் தமிழகம், கேரளா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.