காஃபி டே உரிமையாளருக்கே அந்த நிலைமையா? அப்போ நம்ம கதி!! பதறும் விஜய் மல்லையா!
vijay mallaya talk about Coffee day owner
இந்திய அளவில் மிகப்பெரிய நிறுவனமான காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா காணாமல் போனதாக தகவல்கள் பரவியது. அதன்பின்னர் நேத்ரா ஆற்றின் அருகே சென்றபோது சித்தார்த்தா காரில் இருந்து இறங்கியதாகவும், பின்னர் அவர் மாயமானதாகவும் அவரின் கார் ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீட்டுப்பு பணியினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், தொழில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்துகொள்வதாக சித்தார்த்தா எழுதிய கடிதம் ஓன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியது. இதனையடுத்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இந்தநிலையில் விஜய் மல்லையா, தற்கொலை செய்துக்கொண்ட காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா விவகாரத்துடன் தனது வழக்கையை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், "நான் வி.ஜி சித்தார்த்தா உடன் மறைமுகமாக தொடர்புடையவன். சிறந்த மனிதர் மற்றும் சிறந்த தொழிலதிபர். அவரது கடிதத்தின் உள்ளடக்கங்களால் நான் நொறுங்கிவிட்டேன்.
அரசாங்க முகவர் மற்றும் வங்கிகள் யாரையும் விரக்தியடையச் செய்யலாம். முழு கடனை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பையும் மீறி அவர்கள் என்னை என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.என் விஷயத்தில், எனது சொத்துக்களை எதிர்த்துப் போட்டியிடும் அதே வேளையில் எனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் அவர்கள் தடுக்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.