விராட்கோலி - அனுஸ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா..? வாழ்த்துமழை பொழியும் ரசிகர்கள்..
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஸ்கா ஷர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டநிலையில் அனுஸ்கா ஷர்மா தற்போது கர்ப்பமாக இருப்பதாக விராட்கோலி அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் ஜனவரி மாதம் குழந்தை பிறகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதிக்கு அழகனா பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை விராட்கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய மனைவியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும், தங்களுடைய வாழ்க்கையில் புதிய பயணம் தொடங்கவிருப்பதையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
விராட்கோலியின் இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.