×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

பாஜக வேட்பாளரை ஓடஓட விரட்டி கல்வீசி தாக்குதல்; மண்டை உடைப்பு., தலைதெறித்து ஓடிய அதிகாரிகள்.!!

Advertisement

 

2024 மக்களவைத் தேர்தல் ஆறாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 57.7% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தோணி, கவுதம் காம்பிர், உள்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரும் தங்களின் வாக்குகளை இன்று பதிவு செய்தனர். 

கல்வீசி நடந்த தாக்குதல்

இந்நிலையில், மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜர்கிராம் தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரணத் துடு, தனது தொகுக்குட்பட்ட மங்கலபோட்டா பகுதியில் உள்ள 200 வது பூத்துக்கு சென்று பார்வையிட சென்றார். 

இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!

அச்சமயம் அவரை அங்கிருந்த நபர்கள் சிலர் கற்களை வீசியெறிந்து விரட்டியடித்தனர். இதனால் அவரை அவசர கதியில் அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், அவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின் கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விசாரிக்க சென்ற வேட்பாளரின் மண்டை உடைப்பு

இந்த சம்பவத்தால் பாஜக வேட்பாளர் உட்பட சிலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். மேலும், ஏற்கனவே பாஜக ஆதரவாளர்களை வாக்களிக்க அனுமதிக்காத காரணத்தால், அதுகுறித்து விசாரிக்க தான் சென்றதாகவும், அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும் வேட்பாளர் கூறினார். 

இதையும் படிங்க: உடல் உறுப்பு செயலிழந்து கர்ப்பிணி பெண் பலி: பலாத்காரத்தால் அடுத்தடுத்து நடந்த துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #Lokshaba election #பாஜக #இந்தியா #இந்திய அரசியல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story