ஆத்தாடி..! கடந்த 58 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய உச்சம்.! கொளுத்தி எடுக்கும் வெயில்.!
ஒடிசாவின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக வெப்பநிலை அ
ஒடிசாவின் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. தலைநகர் புவனேஸ்வர் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அங்கு ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பிப்ரவரி இறுதிக்குள் 9-12 வகுப்புகளுக்கான பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மாநில அரசை கட்டாயப்படுத்தியது. இதனால் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை பள்ளிகளில் கலந்துகொள்வார்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மார்ச் 1 முதல் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகளுக்குச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இனிமையான வானிலைக்கு பெயர் பெற்ற புவனேஸ்வரில் 58 ஆண்டுகளில் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்தது இதுவே முதல்முறை என கூறுகின்றனர்.