விவசாயக்கடனுக்காக உயிரை விட்ட கணவன்! விதவை மனைவிக்கு தேர்தலில் கிடைத்த வாய்ப்பு!
widow wife election chance
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் சுதாகர் இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி பெயர் வைஷாலி. சுதாகர் 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயத்திற்காக ரூ.70000 கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை கொண்டார் சுதாகர். இதனையடுத்து அங்கன்வாடியில் மாதம் ரூ.3500-க்கு வேலை செய்து தான் பிள்ளைகளை கவனித்து வந்தார் வைஷாலி.
வைஷாலி அப்பகுதியில் நடைபெற்ற இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரமாதமாக பேசினார். அவரின் பேச்சை பார்த்த பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்.எல்.ஏ அவரின் திறமையை பார்த்து அந்த கட்சியின் சார்பில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
வைஷாலிக்கு தேர்தல் செலவுகள், பிரசார செலவுகளுக்கு பணம் வேண்டும் என வாட்ஸ் மூலம் கோரிக்கை வைத்தார். இந்தநிலையில் இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்ததுள்ளது என கூறப்படுகிறது.
இதுகுறித்து வைஷாலி கூறுகையில், நான் தேர்தலில் போட்டியிடுகிறேன், இது எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம் என கூறியுள்ளார்.