இது தேவையா.. ஆத்திரத்தில் 9-வது மாடியில் இருந்து தொங்கிய மனைவி.! காப்பாற்ற போராடிய கணவன்.! அதிர்ச்சி வீடியோ.!
9-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி
9-வது மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள கிராசிங்ஸ் ரிபப்ளிக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்த கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 13ம்தேதி அன்றும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் மனைவி தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று கூறிவிட்டு 9வது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளார்.
இதனைப்பார்த்த கணவன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, குதிக்கப்போன மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டார். தற்கொலை செய்ய குதித்துவிட்ட மனைவிக்கு அப்போது தான் பயம் வந்திருக்கிறது. எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். திடீர் என்று சத்தம் கெட்டகால் குடியிருப்பின் எதிர் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனைவியை தன்னுடைய கையை வைத்து மேலே தூக்க கணவன் பலத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இந்த முயற்சியின் போது, அவர் திடீரென்று அங்கிருந்து கீழே விழுந்தார். இதில் மனைவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுத்து, மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.