மனைவின்னா இப்படி இருக்கணும்.. கணவரின் ஆசையை ₹25 ஆயிரம் சேமித்து மனதை வென்ற சுவாரசியம்..!!
மனைவின்னா இப்படி இருக்கணும்.. கணவரின் ஆசையை ₹25 ஆயிரம் சேமித்து மனதை வென்ற சுவாரசியம்..!!
சமூகவலைதளங்களில் DIY ஹேக்கிங் தொடர்பான பல வீடியோக்கள் வரப்படும் நிலையில், பலரும் தங்களின் நேரத்தை விரயம் செய்வதை தடுத்து நேரத்தையும், செலவையும் மிச்சபடுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்மணி ஒருவர் புத்திசாலித்தனமாக கணவருக்கு ரூ.25 ஆயிரம் செலவை மிச்சபடுத்தி இருக்கிறார்.
டெக்னாலஜி தொடர்பாக யூடியூப் நடத்திவரும் ரஞ்சித் தனது மனைவியிடம் வீட்டில் பயன்படுத்துவதற்காக எளிதில் கையாளக்கூடிய Rollable Motorised Projector வாங்க வேண்டும் என்றும் அதற்கு ரூ.20 முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் செலவு அதிகமாகும் என்பதால் அவரது மனைவி புரொஜக்டர் வாங்குவதற்காக பதிலாக அழகிய வெள்ளைதிரையை அலமாரியில் மாட்டி கணவருக்கு ரூ.25,000 வரையில் சேமித்திருக்கிறார்.
இதனை புகைப்படத்தோடு ரஞ்சித் தனது சமூகவலைபக்கங்களில் பதிவிடவே, "மனைவியின் பேச்சைக்கேட்பது எப்போதும் மேன்மையை தரும்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.