×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனிமே எந்த நாய்க்காவது ஊசி போடுவியா?.. கால்நடை மருத்துவரை கடித்து குதறிய வெறி நாய்..!

இனிமே எந்த நாய்க்காவது ஊசி போடுவியா?.. கால்நடை மருத்துவரை கடித்து குதறிய வெறி நாய்..!

Advertisement

தொடுபுழாவில் வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறியது. 

மூணாறு, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் யூஜின். இவர் ஒரு விவசாயி. இவர் தனது வீட்டில் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த நாய்க்கு திடீரென்று வெறிபிடித்தது. வெறிபிடித்த அந்த நாய், யூஜினின் மனைவியை கடித்தது. 

உடனே இதுகுறித்து கால்நடை மருத்துரவருக்கு யூஜின் தகவல் அளித்தார். எனவே அவரது வீட்டுக்கு வந்த கால்நடை மருத்துவர் ஜெய்சன் ஜார்ஜ், வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்டார். அப்போது அந்த வெறிபிடித்த நாய், கால்நடை மருத்துவரை கடித்து குதறியது. 

இதை தொடர்ந்து அந்த நாய் கால்நடை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் நாய் கடித்ததால் காயமடைந்த கால்நடை மருத்துவர் ஜெய்சன் ஜார்ஜ் மற்றும் யூஜினின் மனைவி ஆகியோர் வெறிநாய் கடி கதடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Munnar #Rabid dog #Bit the doctor #தொடுபுழா #கால்நடை மருத்துவர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story