"கடவுளே.! என் மாமியார் சீக்கிரம்..." - 50 ரூபாய் நோட்டில் எமனுக்கு ரிக்வெஸ்ட் செய்த மருமகள்.!
கடவுளே.! என் மாமியார் சீக்கிரம்... - 50 ரூபாய் நோட்டில் எமனுக்கு ரிக்வெஸ்ட் செய்த மருமகள்.!
மாமியார் மருமகள் சண்டை என்பது எல்லா வீட்டிலும் வழக்கமாக நடக்கும் ஒன்று. ஆனால் மாமியார் இறக்க வேண்டும் என ரூபாய் நோட்டில் எழுதி அதனை கோவில் உண்டியலில் போட்ட விசித்திரமான சம்பவம் கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.
கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தும் பணத்தில் தங்கள் மனதில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் எழுதி அந்த ரூபாய் நோட்டுக்களை கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பொதுவாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் தங்கள் காதல் வெற்றி பெற வேண்டும் விரைவாக திருமணம் நடைபெற வேண்டும் நோய் குணமாக வேண்டும். இது போன்ற வேண்டுதல்களை ரூபாய் நோட்டுகளில் எழுதி கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழமையான ஒன்று.