ஈரக்குல நடுங்குதே.. உறங்கிக் கொண்டிருந்த கணவனை துண்டு துண்டாக வெட்டிய பெண்... பகீர் உண்மை.!
ஈரக்குல நடுங்குதே.. உறங்கிக் கொண்டிருந்த கணவனை துண்டு துண்டாக வெட்டிய பெண்... பகீர் உண்மை.!
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை கட்டிப்போட்டு கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் மற்றும் துலாரோ தேவி தம்பதியினருக்கு சோம்பால் என்ற 29 வயது மகன் இருக்கிறார். இந்நிலையில் தனது தந்தையை மூன்று நாட்களாக காணவில்லை என்றும் தனது தாய் மீது சந்தேகம் இருப்பதாகவும் சோம்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் துலாரோ தேவியை காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.