உணவு டெலிவரி ஏஜெண்டை செருப்பால் அடித்த பெண்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!
உணவு டெலிவரி ஏஜெண்டை செருப்பால் அடித்த பெண்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!
பைக்கில் வந்த டெலிவரி ஏஜென்டை ஒரு பெண் தனது செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில், உணவு டெலிவரி ஏஜெண்டை, பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அந்தப்பெண் 'டெலிவரி ஏஜன்ட் தனது ஸ்கூட்டியின் மீது மோதியதால் காயமடைந்ததாகவும், அதனால் அவரை தாக்கினேன்' என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் உள்ளதாவது, டெலிவரி ஏஜெண்டை பெண் தனது செருப்பால் அடித்த நிலையில், சுற்றி இருந்தவர்கள் நிறுத்தும்படி கூறியும் அவர் அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அந்தப் பெண் ஸ்கூட்டியில் செல்லும்போது போனில் பேசிக்கொண்டிருந்ததாக சிலர் பதிவிட்டுள்ளனர்.
மேலும் பைக் ஓட்டி வந்த டெலிவரி ஏஜென்ட் தவறான பக்கத்தில் சென்றதாக ஒரு சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். தவறான பாதையில் டெலிவரி ஏஜென்ட் வந்தது தவறு என்பதை ஏற்றுக் கொண்ட பலரும், பெண் நடுரோட்டில் வைத்து அவரை செருப்பால் அடித்தது பெரும் தவறு என்று கூறியுள்ளனர். இதனால் அவரை அவமதித்ததற்காக அந்த பெண் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று கூறி வருகின்றனர்.