ஒரு கையில் குழந்தை.! மறு கையில் சூட்கேஸ்..! 265 கிமீ நடந்து செல்லும் இளம்பெண்..! பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வீடியோ.!
Women carry kid and suitcase walk 265 kilo meters
ஒருகையில் குழந்தையுடனும், மற்றொரு கையில் சூட்கேசுடன் பெண் ஒருவர் 265 கிமீ நடந்து செல்லும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் மூன்றாவது கட்டமாக வரும் மே 17 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு வந்த வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலம் மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்பிவைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஆனால், சிறப்பு ரயிலில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், ஊரடங்கால் கடந்த சில வாரங்களாக வேலை இழந்து பணம் இல்லாத கூலி தொழிலார்கள் அவ்வளவு பணம் கொடுத்து சிறப்பு ரயில்களில் செல்ல முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து அலகாபாத் வரை சுமார் 265 கிமீ ஒரு கையில் குழந்தையுடனும் இன்னொரு கையில் சூட்கேசுடன் ஒரு பெண் நடந்தே சென்று கொண்டிருக்கும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட பெண்ணிடம் அங்கிருந்தவர்கள் இதுகுறித்து விசாரித்ததில், சிறப்பு ரயில்களில் செல்ல தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் அதனால் குழந்தையுடன் நடந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், வெளிமாநில தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு இலவச ரயில்களை இயக்க வேண்டும் என பலரும் கோரிக்கைவைத்து வருகின்றனர்.