சிகிச்சையின் போது மருத்துவர்கள் கண் முன்னே வாய் வெடித்து பெண் மரணம்! என்ன நடந்தது தெரியுமா?
Women dies after mouth explosion while giving treatment

மருந்து குடித்துவிட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வாய் திடீரென வெடித்ததில் அந்த பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜே.என்.மருத்துவ கல்லூரியில் இந்த சமப்வம் நடைபெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை விஷம் குடித்த நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அந்த பெண் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் வாயில் குழாய் சொருகி மருத்துவர்கள் விஷத்தை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அந்த பெண்ணின் வாயில் இருந்து திடீரென சத்தம் கேட்டுள்ளது. சற்று நேரத்தில் அந்த பெண் மரணமடைந்தார். மருத்துவர்கள் சோதித்ததில் அவர் சல்பியூரிக் அமிலத்தை குடித்திருக்கலாம் என்றும், இந்த அமிலம் குழாய் வழியாக, வெளியில் உறிஞ்சப்படும்போது, ஆக்சிஜன் கலந்து, வேதியியல் மாற்றம் காரணமாக வெடித்திருக்கலாம் என்றும், தெரியவந்தது.