முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் குழந்தையுடன் ஈடுபட்ட பெண் காவலர்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!
women police duty with her child
உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதமபுத்தர் நகர் பகுதியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் குழந்தையுடன் ஈடுபட்டு உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவுதமபுத்தர் நகர் பகுதியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் நொய்டா நகரில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க அவர் இன்று சென்றார்.
இந்தநிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபபட்டு இருந்தனர். அவர்களில் 20 வயது நிரம்பிய பெண் காவலர் பிரீத்தி ராணி என்பவர் அவரது ஒன்றரை வயது குழந்தையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது கணவர் இன்று தேர்வு ஒன்றை எழுத செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவரால் குழந்தையை கவனித்து கொள்ள முடியவில்லை. அதனால் எனது பாதுகாப்பில் குழந்தையை வைத்திருக்கிறேன்.
அதிகாலை 6 மணியில் இருந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரீத்தி ராணி கடமை நமக்கு முக்கியம். அதனால் எனது குழந்தையை கொண்டு வர நேர்ந்துள்ளது என கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கடைமையின் சிகரம் என பலரும் பெண் காவலரை பாராட்டி வருகின்றனர்.