பெண் போலீசார் சுட்டுக்கொலை! சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை! போலீசாரையே தலைசுற்ற வைத்த அதிர்ச்சி பின்னணி!
women sub inspector killed by other police for oneside love
கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ப்ரீத்தி அஹ்லவத். 26 வயது நிறைந்த இவர் நேற்று கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ப்ரீத்தியின் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் ப்ரீத்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ப்ரீத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ப்ரீத்தியை மற்றொரு காவல் ஆய்வாளரான தீபான்சு ரதி என்பவர் சுட்டுக் கொன்றது கண்டறியப்பட்டது.
மேலும் இதற்கிடையில் தீபான்சு, சோனாபட் பகுதியில் காரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தீபான்சு ப்ரீத்தியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் எனவும் அதற்கு ப்ரீத்தி மறுப்பு தெரிவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இதனால் ஆத்திரத்தில் தீபான்சு ப்ரீத்தியை சுட்டுக் கொன்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.