100க்கும் மேற்பட்ட பெண்களிடம், முகமூடி அணிந்து பாலியல் சில்மிஷம் செய்த பிரபல மல்யுத்த வீரர்.! அதிர்ச்சி சம்பவம்!!
100க்கும் மேற்பட்ட பெண்களிடம், முகமூடி அணிந்து பாலியல் சில்மிஷம் செய்த பிரபல மல்யுத்த வீரர்.! அதிர்ச்சி சம்பவம்!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்துவரும் இளம் யோகா ஆசிரியை ஒருவர் அண்மையில் மாளவியா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த முகமூடி அணிந்து வந்த நபரை கண்டுபிடிக்க 4 படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன் முதற்கட்டமாக அவர்கள் அந்த பகுதியில் பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். இதில் முகமூடி அணிந்தவாறு சந்தேகபடும் வகையில் நபர் ஒருவர் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் 24 வயது நிறைந்த பிரபல மல்யுத்த வீரர் என தெரியவந்தது. அவர் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்றுள்ள 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாராம். இந்த நிலையில் நேற்று போலீசார் கவுஷல் பிபாலியாவை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர், தான் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புகொண்டுள்ளார். ஆனால் இதுக்குறித்து எந்த பெண்ணும் புகார் அளிக்க முன்வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.