உயிரைப்பறிக்கும் மஞ்சள் பூஞ்சை நோய்!! முக்கிய அறிகுறிகள் என்ன தெரியுமா?? கவனமா இருங்க!!
கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை விட மிக ஆபத்தான மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரபிரதேசத்தின் காஸியா
கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை விட மிக ஆபத்தான மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் மக்களை வாட்டிவதைத்துவரும் நிலையில், தற்போது பூஞ்சை தொற்றுகளும் மக்களை அதிர்ச்சியடையவைத்துவருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நீண்டகாலமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஸ்டீராய்ட் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களை இந்த பூஞ்சை தொற்றுகள் அதிகம் தாக்குகிறது.
குறிப்பாக மனிதர்களின் சளி, காற்று, மண், தாவரங்கள், உணவு, அழுகிய பழங்களில் காணப்படும் பூஞ்சைகளில் இருந்து இந்த பூஞ்சை தொற்று உருவாகிறது. கருப்பு பூஞ்சையை பொறுத்தவரை மனிதர்களின் கண்களை தாக்குகிறது. முகத்தில் வீக்கம், கண்களுக்கு கீழ் வீக்கம் அல்லது நிறம் மாற்றம், மூக்கடைப்பு, வாயினுள் திரவம் வழிதல், ஈறுகளில் புண், பற்கள் வேறு இடங்களில் வளர்வது போன்றவை இந்த கருப்பு பூஞ்சையின் அறிகுக்குறிகளாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், சோம்பல், குறைந்த பசி, அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு, சிலபேருக்கு, காயங்கள் மெதுவாக குணமாதல், காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்பார்வை மங்குதல் போன்றவை இந்த மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.