ராகுல் காந்தி வருகையே பா.ஜ.க-வின் 100 சதவீத வெற்றி உறுதி! சிரித்த முகத்துடன் யோகி ஆதித்யநாத்!
yogi adityanath talk about bjp win
மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் ஆக்டொபர் 21-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைத்து, பா.ஜனதா 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகின்றார். அவர் நேற்று யவத்மால் மாவட்டம் உமர்கெட் பகுதியில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி வந்துள்ளதாக அறிந்தேன். அவர் மகாராஷ்டிராவுக்கு வந்திருக்கிறார் என்றால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி விட்டது.
ராகுல்காந்தி எந்த கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்கிறாரோ அந்த கட்சி தோல்வியை தான் சந்திக்கும். எனவே ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் தோல்வி உறுதியாகி உள்ளது என உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.