சார்... மரத்தை வெட்டிட்டாங்க.! 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் போட்ட ஒரே ஒரு போன் கால்.! அதிரடி ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்.!
தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், வனத்துறை அதிகாரிக்கு போன் செய்துள்ளான்.
தெலங்கானா மாநிலத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர், வனத்துறை அதிகாரிக்கு போன் செய்து, தான் ஒரு பசுமை ஆர்வலர் என்றும், தன் வீட்டுக்கு அருகில் இருந்த 40 வருட பெரிய வேப்பமரத்தை வெட்டிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவன் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட வனத்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்திற்கு அருகே இருந்த வேப்பமரம் ஒன்று வெட்டப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் புதிதாக கட்டும் கட்டுமானப்பணிக்கு இடையூறாக இருப்பதாக மரத்தை வெட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த வேப்பமரத்தை வெட்டிய நபருக்கு 62,075 ரூபாய் அபராதம் விதித்தனர். 40ஆண்டுகால மரத்தை வெட்ட வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இயற்கை மீது ஆர்வம் கொண்ட அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.