கைதியின் சிறுநீரை குடிக்க இளைஞரை கட்டாயப்படுத்திய உதவி ஆய்வாளர்.! இளைஞர் கொடுத்த பரபரப்பு புகார்.!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கிருகுன்டா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காணவில்

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கிருகுன்டா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காணவில்லை என உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கிருகுன்டா கிராமத்தை சேர்ந்த புனித் என்ற இளைஞரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த புனித், விசாரணையின் போது தனக்கு காவல் உதவி ஆய்வாளர் செய்த சித்ரவதை குறித்து காவல் துறை, மனித உரிமை கமிஷனுக்கும் கடிதம் மூலம் புகார் தெரிவித்தார்.
அவர் அனுப்பிய கடிதத்தில், தன்னிடம் விசாரணை நடத்தியபோது என்னை தலைகீழாக கட்டி அடித்தனர். ஒரு கைதியின் சிறுநீரை என்னை குடிக்க காவல் உதவி ஆய்வாளர் வற்புறுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் அர்ஜுன் என்பவர் உடனடியாக எஸ்.பி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதை ஏற்காத பல்வேறு அமைப்பினர், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.