சில நிமிடங்களில் தனது உயிர் பிரியப்போகிறது என அறியாமல் தனது புகைப்படத்தை வெளியிட்ட பெண் மருத்துவர்.! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!
இமாச்சலப் பிரதேசம் கின்னார் மாவட்டத்தின் சங்கலா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்
இமாச்சலப் பிரதேசம் கின்னார் மாவட்டத்தின் சங்கலா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பெரிய அளவிலான பாறைகள் சாலையில் சென்ற சுற்றுலா வாகனங்களின் மீது விழுந்தது. இந்தக்காட்சியை அங்கு சுற்றுலாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கின்னோர் மாவட்டம், சங்கலா பள்ளத்தாக்கில் நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது பள்ளத்தாக்கின் அடிவாரத்திலிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பெரிய பாறைகள் விழுந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இதுவரை 9 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த 9 பேரில் ஒருவர் தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 37 வயதான தீபா சர்மா என்ற பெண் மருத்துவர். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் நின்றவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தை இரண்டு தினங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், ''பொதுமக்கள் செல்லக்கூடிய இந்தியாவின் கடைசி எல்லையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த எல்லையைத் தாண்டி சுமார் 80 கி.மீ தூரத்தில் திபெத் எல்லை உள்ளது. அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என தான் எடுத்த புகைப்படத்தை இணைத்துப் பகிர்ந்துள்ளார்.
ஆனால், அப்போது தீபாவிற்கு தெரியாது அடுத்த சில நிமிடங்களில் அவரின் உயிர் பிரியப்போகிறது என்று. பின், சிறிது நேரத்தில் மதியம் 1.25 மணி அளவில் கடும் மழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாலம் முழுமையாக இடிந்து விழுவதும், கற்பாறைகள் கீழ்நோக்கி உருண்டு ஓடுவதும் தெரிகிறது.