வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர்களை குறிவைத்த இளம்பெண்! பெண்ணின் டகால்டி வேலையால் சிக்கிய ஆண்கள்!
young girl cheated lot of youngsters
ஹைதராபாத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் திருமண தகவல் மைய இணையதளத்தில் தன்னை மணக்க மாப்பிள்ளை வேண்டும் என பதிவிட்டுள்ளார். அதில் அவரது பெயர் புஷ்தயி என்றும், வேறு ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய இளைஞர் ஒருவர் அர்ச்சனா பதிவிட்ட புகைப்படத்திற்கு மயங்கி அவரை தொடர்பு கொண்டார். இதனையடுத்து இருவரும் சமூகவலைத்தளம் மற்றும் போன் மூலம் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து திருமண நிச்சயத்துக்கு தனக்கு புடவைகள், நகைகள் வாங்க பணம் வேண்டும் என இளைஞரிடம் அர்ச்சனா கேட்டுள்ளார். கடைசி வரை நேரில் பார்க்காத அந்த பெண்ணின் வங்கி கணக்குக்கு அவர் இரண்டு லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய அடுத்த நொடியில் இருந்து அர்ச்சனவின் போன் சுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர் இது குறித்து ஹைதராபாத்தில் இருக்கும் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அர்ச்சனா வீட்டுக்கு சென்று பார்த்த போது அப்படி ஒருவரே அங்கு இல்லை என்றும் தாங்கள் ஏமாற்ற பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் அர்ச்சனாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீசார் அர்ச்சனாவிடம் நடத்திய விசாரணையில், அவர் இது போல திருமண தகவல் மைய இணையதளம் மூலம் பல பெயர்களில் பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். வேறு அழகான பெண்ணின் புகைப்படத்தை அவர் இதில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அர்ச்சனா ஏற்கனவே கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்கள் தான் அர்ச்சனாவின் குறியாக உள்ளனர். என போலீசார் கூறியுள்ளனர்.