×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் பெண்ணை அடித்து கொன்று பாலத்தில் தொங்க விட்ட குடும்பத்தினர்.! அவர் அணிந்த ட்ரெஸ் தான் காரணமா.? அதிர்ச்சி பின்னணி.!

உத்தரபிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தின் மஹுவாடி காவல் நிலைய பகுதியில் உள்ள சவ்ரேஜி கர்க் கி

Advertisement

உத்தரபிரதேசத்தின் தேவரியா மாவட்டத்தின் மஹுவாடி காவல் நிலைய பகுதியில் உள்ள சவ்ரேஜி கர்க் கிராமத்தில் 17 வயதான நேஹா பாஸ்வான் என்ற இளம் பெண்ணின் உடல் அவரது வீட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பாலத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஜூலை 20 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

நேஹா பாஸ்வான் தனது தாத்தா, பாட்டி , சித்தப்பா மற்றும் சித்தி ஆகியோரால் அடித்து கொல்லப்பட்டார் என்றும், நேஹா பாஸ்வான் ஜீன்ஸ் அணிவதை நிறுத்தாததே இதற்குக் காரணம் என்றும் அவரது தாயார் சகுந்தலா தேவி கூறியுள்ளார். இதுகுறித்து நேஹாவின் தாய் சகுந்தலா தேவி கூறுகையில், சம்பவத்தன்று நாள் முழுவதும் விரதம் இருந்த நேஹா, மாலையில் ஜீன்ஸ், டாப் அணிந்து பூஜை செய்தார்.

அப்போது  ஜீன்ஸ் அணிந்ததற்கு அவரது தாத்தா, பாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், ஜீன்ஸ் அணிவதற்கு தான் தயாரிக்கப்பட்டது, நான் போடுவேன் என கூறினார். அப்போது வாக்குவாதம் முற்றி தாத்தா, பாட்டி உட்பட குடும்பத்தினர் நேஹாவை கட்டையால் சரமாரியாக தாக்கினர். அதில் அவர் மயங்கி கீழே சரிந்தார், பின் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதாக அவர்கள் ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றனர், இதுகுறித்து நான் எனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பினேன், ஆனால், நேஹா மருத்துவமனையில் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். அடுத்த நாள் காலை, பாலத்தில் ஒரு பெண் சடலம் தொங்குவதாக தெரியவந்தது. பின்னர் அது நேஹாவின் சடலம் என தெரியவந்தது என சகுந்தலா தேவி கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #Murder #Jeans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story