காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப 80 வயது முதியவரை கரம் பிடித்த இளம்பெண்...
காதலுக்கு கண் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப 80 வயது முதியவரை கரம் பிடித்த இளம்பெண்...
அன்றைய காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது என்பது மிக அரிதாகவே இருந்தது. ஆனால் நாகரிகம் வளர்ச்சி ஏற்பட்டு சமூக வலைத்தளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. சில இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாகவே ஒருவரோடு ஒருவர் பேசி பழகி காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
அதேபோல் மத்தியப்பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் முக நூலின் வாயிலாக 80 வயது முதியவருடன் பழக்கம் ஏற்பட்டு பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் அகர் மாவட்டத்தில் உள்ள மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான பலுராம் பக்கிரி. இவருக்கும் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியை சேர்ந்தவர் ஷீலா இங்கிள் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே ஷீலா வயது வித்தியாசம் பார்க்காமல் பலுராமை திருமணம் செய்துள்ளார். இருவரின் விருப்பத்தின்படி நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.