மணமகனுக்கு திருமணத்திற்கு முந்தைய நாள் மெசேஜ் அனுப்பிய மணப்பெண்... அடுத்த நொடியே மணமகன் எடுத்த அதிரடி முடிவு... அடக்கடவுளே என்னடா இப்படி ஆச்சு!!
மணமகனுக்கு திருமணத்திற்கு முந்தைய நாள் மெசேஜ் அனுப்பிய மணப்பெண்... அடுத்த நொடியே மணமகன் எடுத்த அதிரடி முடிவு... அடக்கடவுளே என்னடா இப்படி ஆச்சு!!
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும், ஹவுலி நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது செல்பேன் இலக்கங்களை மாற்றி கொண்டு ஒருவரை பற்றி ஒருவர் பேசி தெரிந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மணமகன் தனது வருங்கால மனைவிக்காக ஆசை ஆசையாக சில பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். அந்த பரிசில் ஷாம்பூ உள்ளிட்ட சில பரிசு பொருட்கள் இருந்துள்ளது. பரிசை பிரிந்து பார்த்த பின் மணமகளிடமிருந்து மணமகனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அதாவது ஒரு பொறியாளராக இருந்து கொண்டு இப்படியான மலிவான ஷாம்பூவை அனுப்பி வைத்துள்ளீர்களே இதுதான் உன் லெவலா? என கேட்டுள்ளார். இதனை பார்த்ததும் ஷாக் மற்றும் அவமானம் அடைந்ததாக நினைத்த மணமகன் உடனே திருமணம் வேண்டாம் என கூறி நிறுத்தி விடலாம் என கூறியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள் உடனே நடந்தவற்றை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் மணமகனை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் மணமகன் ஒரே பிடிவாதமாக இருந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.