நடுரோட்டில் வைத்து ஆண் நண்பர் செய்த செயல்! சுருண்டு விழுந்து பலியான பெண்!
young man slapped and killed young girl
மும்பை மான்கர்ட் ரயில்வே நிலையம் பகுதியைச் சேர்ந்த சீத்தா என்ற பெண் சாலையில் நின்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த சீதாவின் ஆண் நண்பர் புஜாரி என்பவருக்கு சீத்தா மீது சந்தேகம் ஏற்பட்டு
நடுரோட்டில் வைத்து சீட்தாவை ஓங்கி அறைந்துள்ளார்.
இதனால், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சீத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசுர சடலமாக கிடந்த சீத்தாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், புஜாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் நண்பரின் ஒரே ஒரு அறையில் அவரது பெண் தோழி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.