நடுரோட்டில் பைக்கை சுக்குநூறாக உடைத்து, அதன்மீது அமர்ந்து கதறி அழுத இளைஞன்! காரணத்தை கேட்டா ஷாக்காகிருவீங்க!
youngman broke the bike and crying in road
நாடு முழுவதும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் அதனால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, அவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதனை தொடர்ந்து சாலை விதிகளை சரியாக பயன்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத தொகை பல மடங்கு அதிகரித்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் பைக்கையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவருக்கு ஹெல்மெட் அணியாத காரணத்தினால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அதிகப்படியான அபராதத்தாலும், போலிஸாரின் நடவடிக்கையாலும் விரக்தி அடைந்த அந்த இளைஞர் திடீரென தனது பைக்கை சாலையில் போட்டு உடைத்துள்ளார்.
பின்னர் சில வினாடிகளுக்குப் பின்பு அந்த பைக் மீது அமர்ந்து அழதொடங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.மேலும் இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.