மயக்க மருந்து கொடுத்து, கைகளைக் கட்டி... துடிதுடிக்க தன் குடும்பத்தையே தீர்த்துக்கட்டிய இளைஞன்! வெளியான பகீர் சம்பவம்!
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் குருதோலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவாத் அலி. இவரது
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் குருதோலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவாத் அலி. இவரது மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் 75 வயது நிறைந்த அலெக்ஜன் பிபி என்ற பாட்டியும் இருந்துள்ளார். ஜவாத் அலியின் முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவில் பணிபுரிந்து வந்துள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டு, சிறு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிப் நடவடிக்கை பிடிக்காமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரத்தில் பெற்றோர்களை கொல்ல திட்டமிட்ட ஆசிப் தாய், தந்தை, தங்கை மற்றும் பாட்டி ஆகியோருக்கு ஜுஸில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மயக்கத்தில் இருந்த அவர்களின் கைகளை கட்டி அருகிலிருந்த குளத்தில் மூழ்கடித்து கொன்று, உடல்களை புதைத்துள்ளார்.
மேலும் அக்கம்பக்கத்தினரிடம் குடும்பத்தினர் அனைவரும் வெளியூர் சென்று விட்டதாக கூறியுள்ளார். இது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த அவரது சகோதரர் ஆரிப் தற்போது வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிப்பை போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். மேலும் சகோதரர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.