×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூடியூபரின் நிர்வாண விடியோவை லீக் செய்த ஹேக்கர்கள்: ஹோம் டூர் வீடியோ பதிவிட்டவர்களே உஷார்.!

யூடியூபரின் நிர்வாண விடியோவை லீக் செய்த ஹேக்கர்கள்: ஹோம் டூர் வீடியோ பதிவிட்டவர்களே உஷார்.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியை சேர்ந்த 21 நபர் யூடியூபராக இருந்து வருகிறார். இவர் தனது யூடியூப் பக்கத்தில் தினமும் வீடியோ பதிவிடுவது இயல்பு என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 17ம் தேதி யூடியூபரின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவை ஹேக் செய்த நபர், யூடியூபர் குளித்துவிட்டு உடலில் ஒட்டுத்துணின்றி நிர்வாணமாக தனது அறைக்குள் வந்து உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். 

இந்த காட்சிகளை ஹேக்கர் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யவே, வீடியோ யூடியூபரின் நண்பர் கவனத்திற்கு வந்தது. அவர் யூடியூபரை தொடர்பு கொண்டு தெரிவித்தபோது தான் சிசிடிவி கேமிரா ஹேக் செய்யப்பட்டு வீடியோ பதிவிடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ந்துபோன யூடியூபர், மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகையில், "இன்றளவில் யூடியூப் பக்கங்களில் பலரும் தங்களின் ஹோம் டூர் என்ற பெயரில், தங்களின் வீட்டில் இருக்கும் அறைகள், பீரோவில் இருக்கும் பொருட்கள், முக்கிய லாக்கர் சாவி வைக்கும் இடம் என அனைத்தையும் பதிவிடுகின்றனர். 

இவை சாமானியர்கள் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், விஷம எண்ணம் கொண்டவர்களுக்கு அது வாய்ப்பு. வீட்டில் கேமிரா பதிவு செய்யப்படும்போது பதிவாகும் காட்சிகளை வைத்து வீட்டில் இருக்கும் நபர்கள் எண்ணிக்கை உட்பட பிற விபரங்களை தெரிந்துகொண்டு பின் கைவரிசையை காண்பிப்பார்கள். 

மேற்கூறிய விஷயத்திலும் அவ்வாறே நடந்திருக்க வேண்டும். இதுகுறித்த விசாரணைக்கு பின்னரே வெளிநபர் செய்த செயலா? அல்லது நன்கு பழையவர் மேற்கொண்ட விவகார செயலா? என்பது தெரியவரும். யூடியூப் பக்கத்தில் நமது தனிப்பட்ட விபரங்களை பதிவிடும்போது கவனமாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்கிறோம் என்ற பெயரில் அதீத அலட்சியத்துடன் செயல்பட்டால், திருட நினைப்பவர்கள் அதனை தனக்கான வாய்ப்பாகவே பார்ப்பார்கள்" என கூறுகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #YouTuber #cctv #hacking
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story