என்னதான் நடந்துச்சு..? இளம் பெண்ணின் மூக்கை உடைத்த ZOMATO டெலிவரி பாய்..? வைரல் வீடியோ..
சொமாட்டா நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் நபர் தனது மூக்கை உடைத்துவிட்டதாக இளம் பெண் ஒரு
சொமாட்டா நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் நபர் தனது மூக்கை உடைத்துவிட்டதாக இளம் பெண் ஒருவர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உணவு டெலிவரி செய்யும் மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று சொமாட்டா. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஹிட்டேஷா சந்திரனே என்ற பெண் சொமாட்டா நிறுவன செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உணவு வீட்டிற்கு வராததால் அவர், அந்த ஆர்டரை கேன்சல் செய்யும்படி சொமாட்டா கஸ்டமர் கேரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
ஆனால் அதேநேரம் அவர் ஆர்டர் செய்த உனவுடன் காமராஜ் என்ற உணவு டெலிவரி செய்யும் நபர் ஹிட்டேஷா சந்திரனேவின் வீட்டு வாசலுக்கு வந்து அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்துள்ளார். ஆனால் மிகவும் தாமதம் ஆகிவிட்டதால் அந்த உணவை எடுத்துசெல்லும்படி ஹிட்டேஷா சந்திரனே கூறியுள்ளார். இதனால் காமராஜுக்கும், ஹிட்டேஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் டெலிவரி பாய் மிக சத்தமாக கதியதாகவும், தனது வீட்டிற்குள் அவர் நுழைய முயன்றதாகக் கூறியுள்ள ஹிட்டேஷா, தனது பாதுகாப்பிற்காக செருப்பை கையில் எடுத்ததாகவும், இந்த சூழ்நிலையில் சொமாட்டா டெலிவரி பாய், எனது மூக்கை உடைத்ததாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள டெலிவரி காமராஜ், "ஹிட்டேஷா தன்னை செருப்பால் அதிக முயன்றதாகவும், தற்காப்பிற்காக அவரை நான் தடுக்க முயன்றபோது, அவர் கதவில் மோதி காயமடைந்தார்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பு புகார்களையும் ஏற்றுக்கொண்டுள்ள சொமாட்டோ நிறுவனம், இது குறித்து போலீசார் உதவியுடன் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காது எனவும் உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் ஹிட்டேஷா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.