2 உலக போர்களை கடந்து, 187 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்துவரும் ஆமை..! மக்களுக்கு நம்பிக்கை தரும் ஜெனாதன்..!
187 years living turtle gives hope in time of corono virus
உலகில் அதிக ஆண்டுகள் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றாக ஆமை கருதப்படுகிறது. கடலில் வாழும் ஆமைகள் சுமார் 152 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடியவை. இந்நிலையியல், சுமார் 187 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்துவரும் ஜொனாதன் என்ற ஆமை தற்போது வைரலாகிவருகிறது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரசால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
வைரஸ் நம்மை இன்று தாக்குமோ, நாளை தாக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் ஒவ்வொரு நாட்களையும் கடந்துவருகிறார்கள். இந்நிலையில், மக்கள் அனைவர்க்கும் நம்பிக்கை தரும் வகையில், 187 ஆண்டுகளாக வாழந்துவரும் ஜொனாதன் என்ற ஆமை பற்றி பதிவிட்டுள்ளார் இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான்.
அவர் பதிவிட்டுல அந்த பதிவில், உலகின் மிகவும் வயதான இந்த ஆமை 1832-ம் ஆண்டு முதல் உயிர் வாழ்ந்து வருகிறது. ஜெனாதன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆமை, தன் வாழ்நாளில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், ரஷ்ய கிளர்ச்சி, பிரிட்டிஷ் சம்ராஜயத்தின் 7 மன்னர்கள், 39 அமெரிக்க அதிபர்களை கடந்து இன்றும் வாழ்ந்துவருகிறது.
கொரோனா உட்பட எல்லாம் கடந்து போகும்.. கொரோனா நினைத்து மக்கள் பயப்படவேண்டாம். நம்பிக்கையுடன் இருப்போம் என்று அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக இதை பதிவிட்டுள்ளார்.