4ஆம் தேதியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான வாழ்க்கை ரகசியம் இதோ!
4 date tips
நான்காம் தேதியில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் நான்கு என்ற எண்ணில் நான்கு திசைகள், நான்கு வேதங்கள் என சில தனித் தன்மைகள் காணப்படுகின்றன.
நான்காம் தேதியில் பிறந்தவர்கள் சிறந்த பேச்சாளராகவும் விளங்குவர். மேலும் கார், லாரி, இரும்பு சம்பந்தமான தொழில்கள் இவர்களுக்கு மிகவும் ஏற்ற தொழில்கள் ஆகும்.அதுமட்டுமின்றி இவர்கள் நிருபர்கள், ரயில்வே, வங்கி ஊழியர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இவர்களுக்கு இளமையிலேயே திருமணம் அமைந்து விடும். அதுமட்டுமின்றி இவர்கள் குடும்பத்தில் மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் நடந்து கொள்வார்கள். ஆனால் மனைவியுடன் எப்பொழுதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருப்பார்கள்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் காதலிப்பவர்கள் ஆக இருந்தால் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ளும் மனதைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள்.4ம் தேதியில் பிறந்தவர்கள் முக்கியமாக 1, 6 ,8 ,9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நலமுடன் அமையும்.அதிலும் 6ம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பொருளாதார வாழ்க்கை வளமுடன் அமையும்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் 1 அல்லது 6 தேதியில் திருமணத்தை வைத்துக் கொண்டால் வாழ்க்கை மிகவும் இன்பமாக அமையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறங்கள் என்னவெனில் நீலம், பச்சை, மஞ்சள் நிறங்கள் ஆகியவை ஏற்ற நிறங்கள் ஆகும். கருப்பு நிற ஆடைகளை அணிவது இவர்களுக்கு நல்லது கிடையாது.