விபத்தில் சிக்கி உயிர் இழந்த கர்ப்பிணி நாய். அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை வெளியே எடுத்த மருத்துவர்..!
5 dog calf rescued from dead dog using operation
விபத்தில் சிக்கி உயிர் இழந்த நாய் ஒன்றுக்கு அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருந்த நாய் குட்டிகளை மருத்துவர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாலையைக் கடக்க முயன்ற கர்ப்பிணி நாய் ஒன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளது. நாய் கர்ப்பமாக இருப்பதாய் உணர்ந்த அந்த வழியாக வந்த தண்டபாணி என்பவர் நாயை மீட்டு அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை ஒன்றுக்கு எடுத்து சென்றுள்ளார்.
மருத்துவர் நாய்க்கு முதலுதவி சிகிச்சை வழங்கியும் நாய்யை காப்பாற்றமுடியவில்லை. இதனையடுத்து நாய் வயிற்றில் இருக்கும் குட்டிகளை காப்பாற்ற முடிவு செய்த மருத்துவர் உடனே அறுவை சிகிச்சை செய்து நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகளை வெளியே எடுத்துள்ளார்.
புதிதாக பிறந்த குட்டிகளுக்கு அருகில் இருக்கும் டீ கடையில் இருந்து பால் வாங்கி பால் பாட்டில் மூலம் பால் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாய்யை மருத்துவமனைக்கு கொண்டுவந்த தண்டபாணி என்பவரே 5 குட்டிகளையும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று பராமரித்து வருகிறார்.