லூடோ ஆடலாம் வரியா.. திருமண மேடையில் விளையாட்டு; மணமகன் அட்ராசிட்டி அலப்பறை.!
லூடோ ஆடலாம் வரியா.. திருமண மேடையில் விளையாட்டு; மணமகன் அட்ராசிட்டி அலப்பறை.!
இந்தியாவில் திருமணங்கள் என்பது ஆயிரம் காலத்து பயிராக கவனிக்கப்படுகிறது. ஒவ்வொரு திருமணமும் நடைபெறுவதில் பெண்பார்த்தல், நிச்சயம், திருமண வைபோவம் என பலநிலைகள் இருக்கின்றன. இவற்றில் அந்தந்த மத, குல வழக்கப்படி பண்பாடுகள் மாறுபடும்.
இன்றளவில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் கலாச்சாரம், வணிக மயமாகிவிட்டது. மேலும், குடி, கூத்து, கும்மாளம் என கேளிக்கைகளும் தொடங்குகிறது. ஒருசில இடங்களில் இதனால் மோதல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. ஸ்மார்ட்போன் ஆதிக்கம் பல்வேறு மாற்றங்களையும் செய்துள்ளது.
இதையும் படிங்க: ரசகுல்லாவா? விஷகுல்லாவா? இனிப்பு விரும்பிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
இந்நிலையில், திருமண சடங்கின்போது மணமகன் லுடோ கேம் விளையாடிய சம்பவம் நடந்துள்ளது. லுடோ விளையாட்டு இன்றளவில் பலரிடமும் பிரபலமாக இருந்து வருகிறது. இதனை மணமகன் மணமேடையில் வைத்து விளையாடிக்கொண்டு இருந்ததை, அவரின் நண்பர்கள் புகைப்படமாக எடுத்து பதிவு செய்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மழைக்கு நடுவே குட்டியுடன் அடைக்கலம் தேடிய நாய்; வைரலாகும் மனம் நெகிழவைக்கும் வீடியோ.!