குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி...
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி...
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை வைத்து ஈவினிங் சமயத்தில் சுவையான ஒரு ஸ்னக்கான ஆலு பிரெட் டிக்கிஸ் வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 5
பிரெட் ஸ்லைஸ் - 5
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் கொத்தமல்லி தழையை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, நீரில் நனைத்து நன்கு பிழிந்து எடுத்த பிரெட் ஸ்லைஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவில் தட்டி வைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் தவாவை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நாம் தட்டி வைத்த டிக்கிளை போட்டு நன்கு சிவக்கும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் தயார்.