மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால், மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் மூலமாக, உடல் வெகுவாக பாதிப்படையும் அதை தடுப்பதற்கு யோகா பயிற்சியாளரான அதிதி ஜவார் ஒரு யோகாசனத்தைப்பற்றி கூறியுள்ளார்.
ஒருவருக்கு இருமல், சளி போன்ற தொந்தரவுகள் மழைக்காலங்களில் ஏற்பட்டால், அப்போது அவருடைய உடலை சூடேற்ற பிராணயாமாவை செய்யலாம். என்று கூறிய அவர், இந்த யோகாவை செய்வதற்கு தங்களுடைய இடது நாசியை சுட்டி விரலால் மெதுவாக அழுத்தி, வலது நாசி மூலமாக, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அதன் பிறகு, இடது நாசி வழியாக, வெளியே விட வேண்டும். நாளொன்றுக்கு 8 முதல் 10 முறை இதனை செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
சைனடிஸ், சளி, மூச்சு குழாய் அழற்சி, காய்ச்சல் மற்றும் பிற நோய் தொற்றுகளை எதிர்த்து போராட இது உதவும். அதோடு இரத்தத்தை இது சுத்திகரிக்கும். அஜீரண அறிகுறிகளை போக்கி விரைவில் உணவுகள் ஜீரணமாக உதவி புரியும் என்று கூறியுள்ளார்